உலகம்

நேபாளம்: நிலச்சரிவினால் பயணிகள் பேருந்துகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதில் 12 பேர் பலி

12/07/2024 08:01 PM

நேபாளம், 12 ஜூலை (பெர்னாமா) -- தலைநகர் காத்மாண்டுவிலிருந்து மேற்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாரயங்காட் - மக்லின் நெடுஞ்சாலையில் அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பயணிகள் பேருந்துகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 65 பேர் காணாமல் போயிருப்பதாக உள்ளூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளன.

நேபாளத்தில் பயணிகள் பேருந்து ஆற்றில் கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்தில் இந்தியர்கள் 7 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வானிலை மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகளில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

அதோடு, காத்மாண்டுவில் இருந்து சித்வானின் பரத்பூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]