உலகம்

உலக சுகாதார அச்சுறுத்தலாக குரங்கம்மை

12/07/2024 08:19 PM

ஜெனீவா, 12 ஜூலை (பெர்னாமா) -- mpox எனப்படும் குரங்கம்மை நோய் இன்னமும் உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக, உலக சுகாதார நிறுவனம், WHO எச்சரித்துள்ளது.

உயிர்க்கொல்லி நோயாக விளங்கும் குரங்கம்மை நோய், தங்கள் நாடுகளில் பரவியுள்ள புகாரை 26 நாடுகளிடமிருந்து தமது தரப்பு பெற்றுள்ள வேளையில், அது, காங்கோ ஜனநாயக குடியரசுக்கும் பரவும் என்ற அச்சமும் எழுந்துள்ளதாக, WHO தலைவர் தெட்ரஸ் அதனோம் கெப்ரியய்சஸ் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவில் அண்மையில் 20 குரங்கம்மை நோய்ச் சம்பவங்கள் பதிவான நிலையில் அதனால் மூன்று மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

அதில், அனைத்துலக பயணத்தை மேற்கொண்ட ஒருவரும் இல்லை என்று தெட்ரோஸ் கூறினார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியே காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு புதிய வகை கிருமி பரவி வரும் வேளையில், அது, மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்நோய்க் கிருமியினால் இவ்வாண்டு 11,000 சம்பவங்களும் 445 மரணங்களும் பதிவாகியதாகவும், சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]