உலகம்

அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லையா? - பைடன் மறுப்பு

13/07/2024 05:33 PM

மிச்சிகன், 13 ஜூலை (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று வெளியாகியிருக்கும் செய்தியை ஜோ பைடன் நிகாரித்திருக்கிறார்.

மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே, முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் தரப்பு இது போன்ற போலிச் செய்திகளைப் பரப்பிவருவதாக பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில், டோனால்ட் டிரம்புடன் நடைபெற்ற பொது விவாத நிகழ்ச்சியில் நேர்த்தியாகப் பேச முடியாமல் பைடன் தடுமாறினார்.

அதனால், கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிபர் தேர்தலில் பைடன் போட்டியிடக்கூடாது என்றும் கட்சி உறுப்பினர்கள் சிலர் நெருக்குதல் அளிப்பதாகக் கூறப்படுகிறது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிபர் பதவியைத் தற்காக்கப்போவதாக பைடன் தெரிவித்திருக்கிறார்.

"நீங்கள் என்னைப் பரிந்துரை செய்தீர்கள். வேறு யாரும் இல்லை. பத்திரிகைகள் அல்ல, பண்டிதர்கள் அல்ல, உள்நாட்டவர்கள் அல்ல, நன்கொடையாளர்கள் அல்ல. வாக்காளர்களாகிய நீங்கள். நீங்கள் வேறு யாரையும் முடிவு செய்யவில்லை. மேலும் நான் எங்கும் செல்லமாட்டேன்," என்று அவர் கூறினார்.

இதுவரை பைடன் தரப்பைச் சேர்ந்த 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர் அதிபர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)