பொது

டீசல்: ஃபெல்டாவிற்கு 10 கோடி ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீடு

14/07/2024 05:59 PM

செர்டாங், 14 ஜூலை (பெர்னாமா) -- டீசல் உதவித் தொகை மறுசீரமைப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்த தோட்டத் தொழில்துறை செயல்முறையில் செலவு அதிகரித்திருந்தால் அதனை ஈடுகட்ட கூட்டரசு நில மேம்பாட்டு வாரியமான ஃபெல்டாவிற்கு 10 கோடி ரிங்கிட் கூடுதல் நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. 

ஃபெல்டா குடியிருப்பாளர்களின் வருமானம் ஒருபோதும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

டீசல் விலை அதிகரிப்பின் காரணமாக ஆண்டுக்கு ஃபெல்டா எதிர்கொள்ளும் 12 கோடியே 16 லட்சம் ரிங்கிட் கூடுதல் நிதி தாக்கத்தைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் விவரித்தார்.  

இன்று, சிலாங்கூர், செர்டாங்கில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு ஃபெல்டா குடியிருப்பாளர் தினத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றியப் பிரதமர் அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)