பொது

ஃபாரா கொலை வழக்கில் அரசு ஊழியருக்கு 7 நாள்கள் தடுப்புக் காவல்

16/07/2024 06:16 PM

ஈப்போ, 16 ஜூலை (பெர்னாமா) -- நேற்று மாலை, உலு சிலாங்கூர், கம்போங் ஶ்ரீ க்ளேடாங்கில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நூர் ஃபாரா கர்தினி அப்துல்லா எனும் பெண்மணி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு உதவும் பொருட்டு, பொது சேவை துறை ஊழியர் ஒருவர் ஏழு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் விசாரணையை மேற்கொள்வதற்கு இன்று காலை, சிலாங்கூர், கோலா குபு பாரு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 26 வயதான அச்சந்தேக நபரின் தடுப்புக் காவல் உத்தரவை நீதிபதி நூருல் மர்டியா முஹமட் ரெட்சா பிறப்பித்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டிஎஸ்பி முஹமட் அஸ்ரி முஹமட் யூனுஸ் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் இன்று தொடங்கி ஏழு நாள்களுக்கு அந்நபர் தடுத்து வைக்கப்படுவதை, தொடர்பு கொண்டபோது அவர் உறுதிபடுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)