பொது

அரியணை அமரும் விழா; 1,250 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்

20/07/2024 11:23 AM

கோலாலம்பூர், 20 ஜூலை (பெர்னாமா) -- மாட்சிமை தங்கிய மாமன்னரின் அரியணை அமரும் விழாவுடன் சேர்த்து மேலும் ஆறு நிகழ்ச்சிகளை முன்னிட்டு சுமார் 1,250 போலீசாரும் போக்குவரத்து அதிகாரிகளும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜூலை 18 தொடங்கி வரும் 27ஆம் தேதி வரை அவர்களின் பணி தொடரும் என்று புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.

இன்று நடைபெற்று வரும் அரியணை அமரும் விழாவில் போது, ​​புக்கிட் அமான் மற்றும் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 378 அதிகாரிகளும் உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இச்சடங்கு முறை குறித்து கடந்த ஜூலை 10ஆம் தேதி முதல் அதில்  உட்படுத்தப்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக  இன்று இஸ்தானா நெகாரா பிரதான நுழைவாயிலில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இவ்விழாவை முன்னிட்டு கோலாலம்பூரைச் சுற்றியுள்ள 14 சாலைகள்  கட்டம் கட்டமாக மூடப்படும்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)