பொது

இணைய பகடிவதை அச்சுறுத்தல்; சிறப்புக்குழு விரிவான ஆய்வை மேற்கொள்ளும்

21/07/2024 06:32 PM

பட்டர்வெர்த், 21 ஜூலை (பெர்னாமா) -- வரும் அக்டோபர் மாதம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இணைய பகடிவதையைக் ஒழிப்பதற்கான குற்றவியல் சட்டம், சட்டம் 574-கில் திருத்தம் செய்வதற்கு முன்னதாக, நான்கு அமைச்சுகளை உட்படுத்திய ஒரு சிறப்புக் குழு, அது குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளும்.

இதுவரை நாட்டுச் சட்டத்தில் இல்லாத இணையப் பகடிவதை தொடர்பான விளக்கத்தை இக்குழு ஆராய உள்ளதாக, சட்டம் மற்றும் கழகச் சீர்த் திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.

பிரதமர் துறையின் சட்ட விவகாரங்களுக்கான பிரிவு, இலக்கவியல் அமைச்சு, உள்துறை அமைச்சு , தொடர்பு அமைச்சு ஆகியவையே அந்த நான்கு அமைச்சுகளாகும்.

இன்று புக்கிட் மெர்தாஜம் தொகுதி அம்னோ கூட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)