பொது

கோம்பாக் பூர்வக்குடி மருத்துவமனைக்கு பேரரசியார் சிறப்பு வருகை

23/07/2024 06:39 PM

கோலாலம்பூர், 23 ஜூலை (பெர்னாமா) -- கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பூர்வக்குடி மருத்துவமனைக்கு பேரரசியார், ராஜா சாரித் சொஃபியா இன்று வருகைப் புரிந்தார்.

காலை மணி 9.53-க்கு அங்கு வருகைப் புரிந்த பேரரசியாரை பிரதமரின் துணைவியர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும், சிலாங்கூர் மந்திரி புசாரின் துணைவியார் டத்தின் ஶ்ரீ மஸ்டியானா முஹமட்டும் வரவேற்றனர்.

அவர்களுடன் தொடர்பு அமைச்சரும், 17-ஆவது மாமன்னரின் அரியணை அமரும் சடங்கிற்கான சிறப்பு செயற்குழு தலைவருமாகிய ஃபஹ்மி ஃபட்சில், சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மட் மற்றும் அவரின் துணைவியாரும் அங்கு வருகை மேற்கொண்டனர்.

டாக்டர் சுல்கிஃப்லி, பேரரசியாரை வரவேற்று உரையாற்றி பின்னர் அம்மருத்துவமனை குறித்து சுகாதாரத் துறையின் துணைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ நோரஸ்மான் அயோப் அவருக்கு விளக்கமளித்தார்.

கடந்த சனிக்கிழமை இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற மாட்சிமை தங்கிய 17-ஆவது மாமன்னரின் அரியணை அமரும் விழாவின் ஓர் அங்கமாக பேரரசிரியார் அம்மருத்துவமனைக்கு வருகைப் புரிந்தார்.

இச்சிறப்பு நிகழ்ச்சியில் பேரரசியார் 30,000 ரிங்கிட் நிதியை அம்மருத்துவமனையின் இயக்குநரான டாக்டர் சண்டிஸ் முஹமட் சைட்டிடம் வழங்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)