விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி; இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டார் கோ ஜின் வெய்

31/07/2024 07:36 PM

பாரிஸ், 31 ஜூலை (பெர்னாமா) -- 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தமது பயணத்தை தேசிய மகளிர் ஒற்றையர் பூப்பந்து விளையாட்டாளர் கோ ஜின் வெய் முடித்து கொண்டுள்ளார்.

இன்று நடைபெற்ற குழுவுக்கான இறுதி ஆட்டத்தில் அவர் தென் கொரிய விளையாட்டாளருடன் தோல்வி கண்டார்.

உலகில் 17-ஆம் தரவரிசையில் உள்ள தென் கொரியாவின் Kim Ga Eun-வுடன் கோ விளையாடினார்.

இந்த ஆட்டத்தின் முதல் சுற்றில் 21-17 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டாலும், இரண்டாம் சுற்றில் 20-22 என்ற புள்ளிகளில் கோ வெற்றி பெற்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாம் சுற்றில் 21-23 என்ற புள்ளிகளில் ஜின் வெய் தோல்வி கண்டு ஒலிம்பிக் போட்டியில் இருந்து விடை பெற்றார்.

இவர்களின் ஆட்டம் 65 நிமிடங்கள் வரை நீடித்தது.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)