உலகம்

ரஷ்யாவுடனான உறவை வலுப்படுத்த இந்தோனேசியா எண்ணம் கொண்டுள்ளது

01/08/2024 06:35 PM

மாஸ்கோ, 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ரஷ்யாவுடனான உறவை வலுப்படுத்த இந்தோனேசியா எண்ணம் கொண்டுள்ளதாக அதன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரபோவோ சுபியாந்தோ தெரிவித்திருக்கிறார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் மேற்கொண்ட சந்திப்புக்கு பின்னர், பிரபோவோ அவ்வாறு கூறியிருக்கிறார்.

பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் கல்வி ஆகியவற்றில் இருதரப்பும் வலுவான ஒத்துழைப்பை மேற்கொள்ளும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது தற்காப்பு அமைச்சராக பதவி வகிக்கும் பிரபோவோ, புதினை சந்திப்பதற்காக மாஸ்கோ சென்றுள்ளார்.

வரும் அக்டோபர் மாதம் இந்தோனேசிய அதிபராக அவர் பதவியேற்கவுள்ளார்.

இந்தோனேசியா பல பிரச்சினைகளை சந்தித்த போது ரஷ்யா உதவிக் கரம் நீட்டியதை  பிரபோவோ சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்தோனேசிய மாணவர்களை ரஷ்யாவிற்கு மருத்துவம் பயில அனுப்புவதோடு, பாதுகாப்பு மற்றும் அணுசக்தியில் அந்நாட்டுடன் கூட்டுறவைத் தொடர அவர் எண்ணம் கொண்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)