விளையாட்டு

சுக்மா: இரு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை

15/08/2024 06:39 PM

கூச்சிங், 15 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இன்று நடைபெற்ற மகளிருக்கான வூஷு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இவ்வாண்டுக்கான சுக்மாவில் இரு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் சிலாங்கூரின் மென்டி கெப்லெ சென். 

நேற்று நடந்த மற்றொரு மகளிர் பிரிவு ஆட்டத்தில் அவர் தமது முதல் தங்கத்தை வென்றார். 

இன்றைய போட்டியில், அவர் தனிநபர் பிரிவில் இரண்டாம் தங்கத்தை உறுதிப்படுத்தினார்.

SSC வூஷு மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 21 வயதான அவர், 18 சவால்களை முறியடித்து மொத்தம் 9.606 புள்ளிகளைப் பதிவு செய்து முதலிடம் வென்றார். 

இதனிடையே, ஆடவருக்கான பிரிவில் வோங் சி ஹொங் மூலம், நெகிரி செம்பிலான் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றது. 

உடல் நலம் குறைவான நிலையிலும் சிறந்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி தங்கம் வென்றார். 

இருப்பினும், சிரம்பானைச் சேர்ந்த 20 வயதான வோங் 12 பங்கேற்பாளர்களில் அதிகபட்சமாக 9.596 மதிப்பெண்களைப் பெற்று சுக்மாவில் தனது முதல் தங்கத்தை கைப்பற்றினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)