விளையாட்டு

சுக்மா வரலாற்றில் பெயர் பதித்துள்ளார் ஸ்டெப்னி

16/08/2024 06:57 PM

கூச்சிங், 16 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இன்று நடைபெற்ற மகளிருக்கான  QIANGSHU போட்டியில் சரவாக்கின் வுஷு வீராங்கனை STEPHANIE NGU CHAI ERN மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் தமது பெயரை சுக்மா வரலாற்றில் இடம் பெறச் செய்துள்ளார்.

எஸ்எஸ்சி வுஷு மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதிக்கு இரண்டாவது போட்டியாளராக களம் இறங்கிய அவர் அதிக புள்ளிகளை சேகரித்து போட்டியில் முதலிடம் பிடித்தார்.

STEPHANIE NGU CHAI ERN 9.606 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்றார்.

CHAI ERN-ஐ விட 0.036 புள்ளிகள் குறைவாக பெற்று கூட்டரசு பிரதேசத்தின் LEE CHENG WEI வெள்ளிப் பதகத்தையும், 9.553 புள்ளிகளுடன் பினாங்கைச் சேர்ந்த TANG KOH MING வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இம்முறை சுக்மாவில் இதுவரை அதிகம் தங்கங்களை வென்றப் போட்டியாளராக STEPHANIE திகழ்கிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)