பொது

ஊதிய உயர்வுக்குப் பின்னர் உத்வேகத்துடனும் புதிய பணி கலாச்சாரத்துடனும் பணியாற்றுவீர் - பிரதமர் 

16/08/2024 10:48 AM

புத்ராஜெயா, 16 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பொது சேவை துறை ஊழியர்களுக்கு வரலாற்றிலேயே மிக அதிகமான ஊதிய உயர்வை அரசாங்கம் அறிவிக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், வரும் திங்கட்கிழமை தொடங்கி பொது சேவை துறை ஊழியர்கள் உத்வேகத்துடனும் புதிய பணி கலாச்சாரத்துடனும் பணியாற்றுவார்கள் என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.

தற்போது, புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் 19-வது MAPPA எனப்படும் பொது சேவை பொறுப்பாணை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருக்கும் பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டார். 

விசுவாசம், நம்பகத்தன்மை மற்றும் திறமையுடன் பணியாற்றும் பொது சேவை துறை ஊழியர்களுக்கு மட்டுமே இந்த வெகுமதி வழங்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]