பொது

பணவீக்கத்தைத் தவிர்க்க இரு கட்டங்களிலான ஊதிய உயர்வு

16/08/2024 11:30 AM

புத்ராஜெயா, 16 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பொது சேவை துறையின் நிர்வாகக் குழுவிற்கு 15-இல் இருந்து 42 விழுக்காட்டு ஊதிய உயர்வும் உயர் நிர்வாகக் குழுவிற்கு ஏழு விழுக்காட்டு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார். 

இந்த ஊதிய உயர்வு இரு கட்டங்களாக வழங்கப்படுவுள்ளதாக பிரதமர் கூறினார். 

இந்நிலையில், நிர்வாகக் குழுவிற்கு இவ்வாண்டு டிசம்பர் முதலாம் தேதி தொடங்கி எட்டு விழுக்காட்டு ஊதிய உயர்வும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி ஏழு விழுக்காட்டு ஊதிய உயர்வும் அமலுக்கு வரும் என்று அவர் விவரித்தார். 

அதேவேளையில், உயர் நிர்வாகக் குழுவிற்கு இவ்வாண்டு டிசம்பர் முதலாம் தேதி தொடங்கி நான்கு விழுக்காட்டு ஊதிய உயர்வும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி மூன்று விழுக்காட்டு ஊதிய உயர்வும் அமலுக்கு வரும் என்று அன்வார் குறிப்பிட்டார். 

சிக்கல் மற்றும் பணவீக்கத்தைத் தவிர்க்கும் பொருட்டு இவ்வூதிய உயர்வு அமலாக்கம் இரு கட்டங்களாக செயல்படுத்தப்படுவதாக அனவார் தெளிவுபடுத்தினார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]