இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் சிறந்த அடைவு

16/08/2024 06:34 PM

கோலாலம்பூர், 16 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.9 விழுக்காடு வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது ஆரம்பக் கணிப்பான 5.8 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகமாகும்.

இவ்வாண்டு இறுதிக்குள், நான்கு முதல் ஐந்து விழுக்காடு வரையிலான கணிப்பை அடைவதற்கா சரியான தடத்தில் மலேசியா உள்ளதாக பேங்க் நெகாரா ஆளுநர் டத்தோ அப்துல் ரஷிட் காஃபோர் தெரிவித்தார்.

2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.8 விழுக்காடாக இருந்த சேவைத் துறை இரண்டாம் காலாண்டில் 5.9 விழுக்காடாக வளர்ச்சியடையும் என்று அவர் கூறினார்.

அதேவேளையில், 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதாரம் 4.2 விழுக்காடு வளர்ச்சியடைந்ததாகவும், முதல் பாதியின் வளர்ச்சி சராசரியாக 5.5 விழுக்காடாக இருந்ததையும் டத்தோ அப்துல் ரஷிட் சுட்டிக்காட்டினார்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற, 2024-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் செயல்திறன் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் அத்தகவல்களை வழங்கினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]