பொது

59 பாரம்பரிய கட்டிடங்களில் பாதுகாப்பு & பராமரிப்பு வேலைகள் பூர்த்தி

22/08/2024 04:20 PM

மலாக்கா, 22 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இவ்வாண்டு முழுவதும் நாடு தழுவிய அளவிலுள்ள 59 பாரம்பரிய கட்டிடங்களில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

பினாங்கு, மலாக்கா போன்ற மாநிலங்களின் கவன ஈர்ப்புத் தளங்களை விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமன்றி, மாறாக உள்நாட்டவர்களோடு வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை ஈர்க்கவும் இத்திட்டம் வகை செய்யும் என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி நம்பிக்கை தெரிவித்தார்.

இத்தகையத் திட்டங்கள் மத்திய, மாநிலங்களில் உள்ள, பாரம்பரிய கட்டிடங்களை பராமரிப்பது மற்றும் பாதுகாப்பதை உட்படுத்தி இருப்பதாக அவர் விவரித்தார்.

பெந்தாஸ் எனப்படும், 'Platform for Exploration: Technical and Design' என்ற திட்டத்தை மலாக்கா, அலோர்காஜாவில் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அலெக்சண்டர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)