பொது

அரசாங்க நிறுவன அதிகாரிகளின் நேர்மையற்ற செயல்களை உள்துறை அமைச்சு கண்காணித்து வருகிறது

22/08/2024 07:01 PM

கோலாலம்பூர், 22 ஆகஸ்ட் (பெர்னாமா) -- அமைச்சுகளின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் அரசாங்க நிறுவனங்களில் உள்ள அதிகாரிகளின் ஊழல் மற்றும் நேர்மையற்ற செயல்களை, உள்துறை அமைச்சு, கேடிஎன் தொடர்ந்து கண்காணித்து வருவதாக, இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் கூறினார்.

அமலாக்க உறுப்பினர்களிடையே நிலவும் தவறான செயல்களைத் தடுக்கும் முயற்சியாக, உள்துறை அமைச்சு அந்நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் வலியுறுத்தினார்.

"எனவே பலமுறை வழியுறுத்தினாலும் மீண்டும் நடக்கிறது, ஆகவே, வேலை வாய்ப்புகள் குறித்த அம்சங்களை எங்கள் தரப்பு மீண்டும் பார்க்கவுள்ளோம். பிரதமர் அறிவித்தது போல நாங்கள் பாரபட்சம் காட்டாமல் ஒரு சூழ்நிலையைநீடிக்கும் சில பகுதிகளைத் தவிர்ப்பதற்காக நாங்கள் செயல்படுகிறோம். நீண்ட காலம் அங்கு பணியாற்றுவதால் நீங்கள் நேர்மையை மீறுவீர்கள் என்று அர்த்தமல்ல,'' என்றார் அவர்.

அண்மையில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஐந்து குடிநுழைவுத் துறை, ஜேஐஎம் அதிகாரிகள் கைது செய்யப்பட்டது தொடர்பில் வினவப்பட்ட கேள்விக்கு அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)