உலகம்

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக மோடி போலந்திற்குப் பயணம்

22/08/2024 05:59 PM

வார்சோ, 22 ஆகஸ்ட் (பெர்னாமா) -- உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி போலந்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவின் வியூக பங்காளியான ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள உக்ரேனுக்குச் செல்வதற்கு முன்னர் மோடி போலந்திற்குச் சென்றுள்ளார்.

வியாழக்கிழமை வார்சோவில் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்குடனும் அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரெஜ் டுடாவுடனும், நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அதில், உக்ரேன் எல்லையில் உள்ள பகுதியின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலந்தின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான விலேடிஸ்லோவ் கொசினியாக் கேமிஸ், புதிய தொழில்நுட்பங்கள் உட்பட பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்த எண்ணம் கொண்டிருப்பதாகக் கூறினார்.

மோடியின் இப்பயணம் புது டெல்லிக்கும் வார்சோவுக்கும் இடையிலான 70 ஆண்டுகால அதிகாரப்பூர்வ இருவழி உறவைக் குறிக்கிறது.

அதோடு, இந்திய அரசாங்கத் தலைவரான மொரார்ஜி டேசாய் மேற்கொண்ட முந்தையப் பயணத்தை அடுத்து, 45 ஆண்டுகளுக்குப் பின்னர் மோடியின் இப்பயணம் அமைந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)