பொது

விசாரணை வரும்போது மட்டும் இரட்டை நிலைப்பாடு வேண்டாம்; அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்து

27/08/2024 07:20 PM

கோலாலம்பூர், 27 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தங்கள் மீது விசாரணை வரும்போது மட்டும் அரசாங்கம் நியாயமாக இல்லை என்ற இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டாம் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி அனைத்து தரப்பினருக்கும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் உட்பட எவரையும் குற்றஞ்சாட்டுவதற்கான அதிகாரம், தேசிய சட்டத்துறை தலைவருக்கு உள்ளது என்பதே இதற்கு காரணமாகும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

''அவர்கள் அவசரப்பட்டால், அது என்னைத் தாக்கினால், இது மிகவும் விரிவான விசாரணை. நீங்கள் தவறான விசாரணை நடத்தினால், வழக்குத் தொடர ஏஜிக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதுதான் உண்மை. அவர்கள் அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்வதாகக் கூறுகிறீர்கள். ஆனால், அவர்கள் சம்பந்தப்பட்டால் அரசாங்கம் நியாயமாக இல்லை, இரட்டை நிலைப்பாடு என்று கூறுகிறார்கள். அது வேண்டாம்,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் 2024ஆம் ஆண்டுக்கான அனைத்துலக சமூக பாதுகாப்பு சங்கம், ஐ.எஸ்.எஸ்.ஏ தொழில்நுட்ப கருத்தரங்கை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் அஹ்மட் சாஹிட் அவ்வாறு குறிப்பிட்டார்.

16-ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னரின் அதிகாரத்தை உட்படுத்தி முகிடினின் உரை அமைந்ததாக கூறப்படுவது தொடர்பான விசாரணை, அவசரமாக மேற்கொள்ளப்பட்டதாக கடந்த திங்கட்கிழமை பெர்சத்து குற்றஞ்சாட்டி இருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)