BREAKING NEWS   Paris route represents Malaysia Airlines’ 68th destination and will be served by A350-900 aircraft - Capt Izham | 
 பொது

பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததற்கு புதினுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர்

05/09/2024 06:58 PM

ரஷ்யா, 05 செப்டம்பர் (பெர்னாமா) -- கசானில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள தமக்கு அழைப்பு விடுத்ததற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இன்று, ரஷ்யா, விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்ற 9-ஆவது கிழக்கு பொருளாதார கருத்தரங்கு, ஈ.ஈ.எஃப்-இல் கலந்து கொண்டு உரையாற்றும்போது அன்வார் அவ்வாறு குறிப்பிட்டார்.

''அக்டோபரில் கசானில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அதிபர் புதினின் அன்பான அழைப்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார் அவர்.

பிரிக்சில் இணைய விண்ணப்பித்ததன் மூலம், மலேசியாவின் பொருளாதார அரசதந்திர முயற்சிகளை பல்வகைப்படுத்தவும், பகிரப்பட்ட திட்டங்கள் மற்றும் வியூக பங்காளித்துவம் மூலம் அதன் உறுப்பிய நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் மலேசிய எண்ணம் கொண்டிருப்பதாக நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.

தற்போது பிரிக்சின் தலைமைத்துவப் பொறுப்பை ரஷ்யா கொண்டிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)