பொது

பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பிரதமருக்கான அழைப்பு - ஃபஹ்மி விளக்கம்

06/09/2024 07:47 PM

பெட்டாலிங் ஜெயா, 06 செப்டம்பர் (பெர்னாமா) -- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்திருந்தது குறித்து ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பேச்சாளரான ஃபஹ்மி ஃபட்சில் கருத்துரைத்தார்.

''மலேசியாவிற்கு அதிபர் புதின் விடுத்திருக்கும் அழைப்பு, ஒரு நேர்மறையான முன்னேற்றம் மற்றும் பலனைத் தரும் என்று நம்புகிறோம். பொருளாதார அடிப்படையில் நாம் பார்க்கையில், அது இருதரப்பு அல்லது பலதரப்பு வர்த்தக உறவுகளை அதிகரிக்க முடியும் என்பதோடு, நாட்டிற்கு சாதகமானதாகவும் விளங்கும்,'' என்றார் அவர்.

அணிசேரா நாடான மலேசியா, எந்த ஒரு நாட்டுடனும் அரச தந்திர அடிப்படையில் மட்டுமின்றி, பொருளாதார ரீதியிலும், நல்லுறவு வைத்திருப்பதில் உறுதியாக உள்ளதையும் ஃபஹ்மி சுட்டிக்காட்டினார்.

இன்று, ஆசியா நியூஸ் நெட்வெர்க்கின் 25-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)