பொது

30,000 அமெரிக்க டாலரை கொள்ளையடித்த குற்றச்சாட்டை மறுத்தனர் மூன்று ஆடவர்கள்

11/09/2024 05:59 PM

கோலாலம்பூர், 11 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்த மாதத்தில், ஜப்பானைச் சேர்ந்த வியாபாரி ஒருவரிடமிருந்து, 30,000 அமெரிக்க டாலரை கொள்ளையடித்த குற்றச்சாட்டை சியரா லியோன் மற்றும் லைபீரியாவை சேர்ந்த மூன்று ஆடவர்கள் இன்று, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.

சியரா லியோனைச் சேர்ந்த 34 வயதான பெட்ரிக் சம்பா, 36 வயதான இப்ராஜிம் ஜாலோ மற்றும் லைபீரியாவை சேர்ந்த 38 வயதான டக்ளஸ் டேனியல் டெவின் ஆகிய மூவரும் ஹிரோயுகி அசுமா என்பவரிடம் 30,000 அமெரிக்க டாலரை கொள்ளையடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி, நண்பகல் மணி 1.30க்கு கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள பேரங்காடி ஒன்றில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும், குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 395-இன் கீழ் அம்மூவர் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்மூவருக்கும் நீதிபதி எகுஸ்ரா அலி எவ்வித ஜாமீனையும் வழங்கவில்லை.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)