பொது

ஹலால் சான்றிதழ் குறித்த முடிவு; மலாய் ஆட்சியாளர் மன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது

12/09/2024 08:21 PM

ஷங்காய், 12 செப்டம்பர் (பெர்னாமா) -- உணவகங்கள் மற்றும் உணவு விநியோக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்க வேண்டும் என்று மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தொடர்பிலான எந்தவொரு முடிவும் மலாய் ஆட்சியாளர் மன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

இருப்பினும் இவ்விவகாரம் இன்னும் ஆய்வுக் கட்டத்தில் இருப்பதாலும், நிரந்தரக் கொள்கை அளவில் இது மாற்றம் காணாத நிலையிலும், இதை அரசியலாக்க வேண்டாம் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டார். 

அதேவேளையில், ஹலால் சான்றிதழின் அவசியம் குறித்த ஆய்வில் எந்த தரப்பினரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

ஹலால் சான்றிதழைப் பெறுவதற்கான செயல்முறைக்கு விண்ணப்பதாரர் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை முறையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதனால் விண்ணப்ப செயல்முறை தங்கு தடையின்றி சீராக இயங்கும் என்று டத்தோஸ்ரீ அஹ்மட் சாஹிட் நம்பிக்கைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)