பொது

தொண்டு இல்லம் தொடர்பான 3 விசாரணை அறிக்கைகள் குறித்து போலீசார் ஆலோசனை

17/09/2024 03:59 PM

கோலாலம்பூர், 17 செப்டம்பர் (பெர்னாமா) -- 'Global Ikhwan Service and Business' குழும நிறுவனம், ஜி.ஐ.எஸ்.பி.எச்-க்கு சொந்தமான தொண்டு இல்லம் சம்பந்தப்பட்ட 33 விசாரணை அறிக்கைகளில் மூன்று தொடர்பில், இன்று தேசிய சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் போலீசார் ஆலோசித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுவதற்கான ஆலோசனைகள் மற்றும் உத்தரவு தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர், டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

''2027-ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம், செக்‌ஷன் 14(a)-இன் கீழ் இரண்டு விசாரணை அறிக்கை. அம்மூன்று விசாரணை அறிக்கைள் குறித்து கலந்தாலோசிக்கப்படும். இன்று காலை சரிபார்த்தோம், இன்று மாலையும் உள்ளது, ஃபட்ஸ்லி அதனை சரிபார்க்கிறார்,'' என்றார் அவர்.

2001-ஆம் ஆண்டு சிறார்கள் சட்டம், செக்‌ஷன் 31 உட்பிரிவு (1) உட்பிரிவு (a), குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 427, குற்றவியல் சட்டம், செக்‌ஷன் 505 உட்பிரிவு (b) மற்றும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், செக்‌ஷன் 233 கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரசாருடின் கூறினார்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சிலாங்கூரில் ஆறும் நெகிரி செம்பிலானில் நான்கு என்றும், 10 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டன.

இதனிடையே, இரண்டாம் கட்ட விசாரணையில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பெர்லிஸ் மற்றும் கோலாலம்பூரில் மொத்தம் 23 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டன.

புகாரளித்த 30 பேர் உட்பட, 216 சாட்சிகள், பாதிக்கப்பட்ட 392 பேர், குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் 102 பேர் ஆகிய 740 பேரின் வாக்குமூலத்தை போலீசார்
இதுவரை பதிவு செய்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)