பொது

தொண்டு இல்லம் தொடர்புடைய நிறுவனத்தின் 96 கணக்குகளும் 5 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட சொத்துக்களும் முடக்கம்

17/09/2024 04:03 PM

கோலாலம்பூர், 17 செப்டம்பர் (பெர்னாமா) -- மதத்தையும் சிறார்களையும் சுயநலத்திற்காக பயன்படுத்திய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் 96 கணக்குகளும், ஐந்து லட்சத்து 81 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட சொத்துக்களும் முடக்கப்பட்டன.

மேலும், எட்டு வாகனங்களை பறிமுதல் செய்வதற்கான உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய போலீஸ் படை தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

''ஜி.ஐ.எஸ்.பி-ஐ உட்படுத்தி நாங்கள் இதுவரை அடையாளம் கண்ட 96 கணக்குகளை உள்ளடக்கி அம்லா தரப்பு சொத்து முடக்கம் செய்துள்ளது. AMLATFPUAA செக்‌ஷன் 44 (1)-இன் கீழ் முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 581,552.31 ரிங்கிட் ஆகும். மேலும், நான்கு கணக்குகள் மூடப்பட்டன,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரசாருடின் அவ்வாறு கூறினார்.

இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் பி.டி.ஆர்.எம் தடை விதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)