பொது

நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வுகாண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆராய்கிறது

17/09/2024 05:47 PM

ஜோகூர் பாரு, 17 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளில் குறிப்பாக பெருநாட்காலம் மற்றும் பொது விடுமுறையின்போது ஏற்படும் நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பொதுப்பணி துணை அமைச்சரும் பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவித்தார்.

''நெரிசல் குறிப்பாக வார இறுதியில் இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறை இருந்தால் சாலை முழுவதிலும் நெரிசல் இருக்கும். நெரிசலைக் கையாள ஏ.ஐ நவீன தொழில்நுட்ப முறையோ இதர வழிமுறைகளையோ பிளஸ் மற்றும் நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,'' என்றார் அவர்.

18 இடங்களில் ‘smart lane’ எனப்படும் அவசர வழித் தடம் மற்றும் எதிர்வழியை திறப்பது போன்ற நடவடிக்கைகள், சாலை நெரிசலை தவிர்ப்பதற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சில முயற்சிகளாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)