பொது

இணையப் பாதுகாப்பை உட்படுத்திய விவகாரத்தில் அரசாங்கம் ஒருபோதும் சமரசம் காணாது

11/09/2024 05:30 PM

புத்ராஜெயா, 11 செப்டம்பர் (பெர்னாமா) -- இணையப் பாதுகாப்பு குறிப்பாக சிறுவர்களின் பாதுகாப்பை உட்படுத்திய விவகாரத்தில் அரசாங்கம் ஒருபோதும் சமரசம் காணாது.

அனைவருக்கும் பாதுகாப்பான இணைய வசதியை உறுதிசெய்ய, ஆக்கப்பூர்வமான மற்றும் நிலையான நடவடிக்கைகள் வகுக்கப்பட்டு வருவதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இணையக் குற்றங்கள் சமூக வலைத்தளம் மட்டுமின்றி இணைய வெளியிலும் கணிசமாக அதிகரிப்பதைத் தொடர்ந்து, ஒருமைப்பாட்டு அரசாங்கம் அவ்விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக அவர் கூறினார்.

SOT: 11:39-12:04 --- FULL PC FAHMI
"இணையம், குடும்பத்தில் உள்ள சிறுவர்களுக்கு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிசெய்யவே இந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குற்றச்செயல்கள் சமூக வலைத்தளம் மட்டுமின்றி 'World Wide Web' என்று அடையாளம் காணப்படும் இணைய உலகிற்கு மாறியிருப்பதை கருத்தில் கொண்டு மேலும் முழுமையான சில நடவடிக்கைகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்," என்றார் ஃபஹ்மி.

பாதுகாப்பான இணைய வசதியை உறுதிசெய்யும் முயற்சியில் சிறார்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்தி, முழுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)