உலகம்

ஆஸ்திரேலியாவில் குரங்கம்மை நோய் சம்பவங்கள் அதிகரிப்பு

27/09/2024 06:48 PM

சிட்னி, 27 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்த மூன்று மாதங்களில், ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்படும் குரங்கம்மை நோய் சம்பவங்கள் உயர்ந்துள்ளது.

புறநகர்ப் பகுதிகளில் குரங்கம்மை நோய் சம்பவங்கள் அதிகரிக்கக் குறைந்த தடுப்பூசி விகிதங்கள் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை அந்நாட்டில் 737  குரங்கம்மை நோய் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்நாட்டில் கடந்த ஆண்டு 26 சம்பவங்களும், 2022-ஆம் ஆண்டில் 144  குரங்கம்மை நோய் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டன.

இந்த ஆண்டு,  பெரும்பாலான குரங்கம்மை நோய் சம்பவங்கள் தென்கிழக்கு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மே மாதம் தொடங்கியே,  ஆஸ்திரேலியாவில் குரங்கம்மை நோய் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அந்நாட்டின் சுகாதாரம் மற்றும் முதியோர் பராமரிப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

குரங்கம்மை நோய்ப் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்தில் உள்ள அனைத்து வயதினரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆஸ்திரேலிய அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]