பொது

GISBH: வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும்; பிரதமர் உத்தரவாதம் 

27/09/2024 08:44 PM

கோலாலம்பூர், 27 செப்டம்பர் (பெர்னாமா) -- GISBH நிறுவனம் தொடர்பிலான விசாரணையை அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் வெளிப்படையாக மேற்கொள்ளும் எனும் உத்தரவாதத்தை அரசாங்கம் அளிப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

தற்காலிக தங்குமிடத்தில் தங்கியிருக்கும் 18 வயதிற்குட்பட்ட அனைத்து 542 சிறார்களுக்கும் சமூகநலன், நெறியுரை, சமயம் சார்ந்த அம்சங்கள் மற்றும் கல்வி ஆகியவை முறையாக வழங்கப்படுவதும் உறுதிசெய்யப்படும் என்று பிரதமர் கூறினார். 

பி.டி.ஆர்.எம், இஸ்லாமிய சமய துறை, மாநில சமய மன்றம் உட்பட சமூகநலத் துறை ஒன்றிணைந்து மேற்கொள்ளும் இது குறித்த விசாரணை நிறைவடையும் வரை அவர்களுக்கு இவ்வுதவிகள் அளிக்கப்படும். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]