உலகம்

மெக்சிக்கோவின் முதலாவது பெண் அதிபராக கிளாடியா ஷெயின்பாம் பதவி ஏற்றார்

01/10/2024 07:01 PM

மெக்சிக்கோ சிட்டி, 01 அக்டோபர் (பெர்னாமா) -- மெக்சிக்கோவின் முதலாவது பெண் அதிபராக கிளாடியா ஷெயின்பாம் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

தமது வழிக்காட்டியான ஆண்ட்ரேஸ் மெனுவல் லோபஸ் ஒப்ராடோருக்கு பதிலாக அவர் தமது ஆறு ஆண்டுகால பதவியை இன்று தொடங்கினார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் 62 வயதுடைய மெக்சிக்கோ சிட்டி டத்தோ பண்டாருமான லோபஸ் ஒப்ராடோ மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.

தற்போது பதவியேற்றிருக்கும் ஷெயின்பாம், சமூகநல திட்டங்களை தொடருவது மற்றும் ரயில் இணைப்பை விரிவுப்படுத்து உட்பட லோபஸ் ஒப்ராடோவின் முந்தையக் கொள்கைகளைத் தொடர திட்டமிட்டுள்ளார்.

போதைப் பொருள் விநியோகிப்பு, அமெரிக்காவுடனான நெருக்கடி போன்றவை மெக்சிக்கோ எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்களில் அடங்கும்.

லோபஸ் ஒப்ராடோரின் அரசியல் பாணி கடந்த பல ஆண்டுகளாக பிளவை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஷெயின்பாமின் அமைச்சரவை உறுப்பினர்களாக பதிவியேற்கவிருப்பவர்களில் பெரும்பாலானோர், லோபஸ் ஒப்ராடோரின் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தவர்கள் ஆவர்.

-- பெர்னாமா-டிபிஏ

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)