பொது

தாமான் மெலாவாத்தி நிலச்சரிவு பகுதியில் தொடரும் நில அசைவு 

15/10/2024 08:00 PM

தாமான் மெலாவாத்தி, 15 அக்டோபர் (பெர்னாமா) -- சிலாங்கூர், தாமான் மெலாவாத்தி, ஜாலான் E6 நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்னும் நில அசைவு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

ஜே.எம்.ஜி எனப்படும் மலேசிய கனிமவளம் மற்றும் புவிஅறிவியல் துறை மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொண்ட தொடக்கட்ட மதிப்பீட்டின் மூலம் இது தெரிய வந்துள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி முஹமட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார். 

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 30 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட கென்வஸ் எனப்படும் நிலயிறுக்க படுதா பொறுத்தப்பட்டிருப்பதாக ஏ.சி.பி முஹமட் அசாம் குறிப்பிட்டார்.

தொடர் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்று கேட்கப்பட்டபோது, கனமழை தொடர்ந்தால் அது நிகழும் வாய்ப்புள்ளதை அவர் நிராகரிக்கவில்லை.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]