விளையாட்டு

மெஸ்சியின் 10-வது ஹட்ரிக்

17/10/2024 07:50 PM

பினோஸ் ஆயர்ஸ், 17 அக்டோபர் (பெர்னாமா) -- அனைத்துலகக் காற்பந்துப் போட்டிகளில் 10-வது ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ளார் லியோனல் மெஸ்சி 

அதன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அனைத்துலக ஹாட்ரிக் சாதனையை அவர் ஈடுசெய்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அக்டோப்ர 15-ஆம் தேதி 2026 உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் அர்ஜெண்டினா பொலீவியாவுடன் மோதியது.

கணுக்கால் காயத்திற்குப்பின் தன் நாட்டுக்காக மெஸ்சி களமிறங்கிய இரண்டாம் ஆட்டம் இது.

சொந்தத் திடலில் ஆடிய அர்ஜெண்டினா, 6-0 எனும் கோல் கணக்கில் அபார வெற்றியடைந்தது.

ஆட்டத்தின் 19-வது நிமடத்தில் மெஸ்சி முதல் கோலடித்துத் தன் அணியை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.

அடுத்த இரு கோல்களிலும் முக்கியப் பங்கு வகித்தார். 

பின் ஆட்டம் முடிவதற்குச் சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் புகுத்தி ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)