பொது

17 லட்சம் ரிங்கிட்டை இழந்தார் பணி ஓய்வுப் பெற்ற ஆசிரியை

17/10/2024 08:35 PM

கோலாலம்பூர், 17 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த ஆகஸ்ட் மாதம், தொலைபேசி அழைப்பின் மூலம் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடாக ஆணையம், எம்.சி.எம்.சி-இன் அதிகாரி என்று கூறியவரிடம் ஏமார்ந்து 17 லட்சம் ரிங்கிட்டை இழந்தார் பணி ஓய்வுப் பெற்ற ஆசிரியை ஒருவர். 

72 வயதுடைய சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியை கள்ளப்பண பறிமாற்றத்தால் ஈடுபட்டிருப்பதாகக் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு கிடைத்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, புக்கிட் அமான், வணிக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ ரம்லி முஹமட் யூசோஃப் கூறினார்.  

பல ஏமாற்றும் உத்திகளைக் கையாண்டு அந்நபர் ஆசிரியை வங்கிக் கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் களவாடியுள்ளார். 

தமக்கு தெரியாமல் வங்கிக் கணக்கில் உள்ள அனைத்து பணமும் வெளியேற்றப்பட்டபோதான் தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை அந்த முன்னாள் ஆசிரியை உணர்ந்துள்ளார். 

இவ்வழக்கு, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 420-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]