பொது

கையூட்டுப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் இருவர் கைது 

23/10/2024 07:17 PM

ஜோகூர் பாரு, 23 அக்டோபர் (பெர்னாமா) -- அரசாங்கத் துறை ஒன்றிடமிருந்து குத்தகை ஒன்றை பெறும் நோக்கத்துடன் சுமார் 50,000 ரிங்கிட் கையூட்டை கொடுத்ததாகவும் பெற்றதாகவும் சந்தேகிக்கப்பட்ட, அத்துறையின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் உட்பட இருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் கைது செய்தது. 

ஜோகூர் மாநில எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு விளக்கமளிக்க சென்றிருந்த 20-இல் இருந்து 50 வயதிற்குட்பட்ட அவ்விரு ஆடவர்களும் மாலை மணி ஐந்துக்கு கைது செய்யப்பட்டதாக அவ்வாணையம் தெரிவித்தது. 

2021-இல் இருந்து 2024-ஆம் ஆண்டுடிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் அவர்கள் இருவரும் இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில், இக்கைது நடவடிக்கை குறித்து தொடர்பு கொண்டு கேட்டபோது எஸ்.பி.ஆர்.எம் அமலாக்கப் பிரிவின் துணைத் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குசாய்ரி யாஹ்யா உறுதிப்படுத்தினார்.   

2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்‌ஷன் 17(a)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]