பொது

பிரிக்ஸ்-இல் இடம்பெற்றது மலேசியா 

24/10/2024 05:07 PM

கோலாலம்பூர், 24 அக்டோபர் (பெர்னாமா) -- பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அரசாங்களுக்கு இடையிலான அமைப்பு பிரிக்ஸ்-இல் அதிகாரப்பூர்வமாக இணைந்த புதிய 13 நாடுகளில் மலேசியாவும் இடம் பெற்றுள்ளது.

எனினும், முழு உறுப்பினர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றாலும் அப்புதிய நாடுகள் பங்காளி நாடுகளாக மட்டுமே இணைக்கப்பட்டிருப்பதாக, BRICSInfo எனும் X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

மலேசியாவை தவிர்த்து, அல்ஜீரியா, பெலருஸ், ​​பொலிவியா, கியூபா, இந்தோனேசியா, கசக்ஸ்தான், நைஜீரியா, தாய்லாந்து, துருக்கி, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பிரிக்ஸ்-இல் இணைக்கப்பட்டுள்ளன. 

பிரிக்ஸ் அரசாங்கங்களுக்கு இடையிலான அமைப்பில் இணைவதற்கு அதற்கு தலைமையேற்றிருக்கும் ரஷ்யாவிடம் மலேசியா விண்ணப்பித்திருந்ததை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி உறுதிப்படுத்தியிருந்தார்.  

கடந்த ஜூன் 18-ஆம் தேதி, பிரேசில் அதிபர் Luiz Inacio Lula da Silva-உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரிக்ஸ் அமைப்பில் இணையும் மலேசியாவின் விருப்பத்தை பிரதமர் வெளிப்படுத்தியிருந்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)