பொது

மேலும் இரு ஊடகவியலாளர்கள் TABUNG KASIH@HAWANA நிதியுதவியைப் பெற்றனர்

24/10/2024 06:53 PM

கோத்தா கினாபாலு, 24 அக்டோபர் (பெர்னாமா) -- வாழ்க்கை செலவின சிக்கலையும் உடல்நலக் குறைவையும் எதிர்நோக்கியிருக்கும் சபாவில் வசிக்கும் மேலும் இரு ஊடகவியலாளர்கள் Tabung Kasih@HAWANA நிதியுதவியைப் பெற்றுள்ளனர்.

பெர்னாமாவின் பகுதிநேரப் பணியாளர்களான வாழ்க்கை செலவின சிக்கலை எதிர்கொண்டிருக்கும் 74 வயதுடைய எமின் மாடிக்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 45 வயதுடைய எர்மா வாத்தி அத்தானுக்கும் இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.  

அதனை, பெர்னாமா தலைமைச் செயல்முறை அதிகாரி நூருல் அஃபிடா கமாலுடின் அவர்களுக்கு வழங்கினார்.    

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஹவானா எனப்படும் தேசிய ஊடகவியலாளர் தினக் கொண்டாட்டத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Tabung Kasih@HAWANA நிதியுதவியை இதுவரை 162 பேர் பெற்றுள்ளதாக நூருல் அஃபிடா தெரிவித்தார். 

அவர்களில் 17 பேர் சபாவை சேர்ந்தவர்களாவர். 

இன்று, சபா, கோத்தா கினாபாலுவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]