பொது

ஐ.நா உறுப்பினர் அந்தஸ்திலிருந்து இஸ்ரேல் நீக்கப்பட வேண்டும்

04/11/2024 05:12 PM

கோலாலம்பூர், 04 நவம்பர் (பெர்னாமா) -- பாலஸ்தீனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சட்டம், முடிவு மற்றும் தண்டனையை மீறும் பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து இஸ்ரேல் நீக்கப்பட வேண்டும் எனும் பரிந்துரையை முன்வைக்கும் தீர்மான வரைவை மலேசியா தயாரித்து வருகிறது.

இந்த தீர்மானம் தற்போது விவாத செயலமுறையில் இருப்பதாகவும், அதற்கான ஒப்புதல் பெறுவதற்கு கூடியவிரைவில் ஐ.நா பொதுப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அந்த தீர்மான வரைவை தயாரிக்கும் செயல்முறைக்காக கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி மலேசியாவும் முதன்மைக் குழுவுடன் இணைந்தது.

ஐ.நா செயல்பாடுகள் மற்றும் வருகையை அனுமதிக்கும் இஸ்ரேலின் பங்கு குறித்து அனைத்துலக நீதிமன்றம், ஐ.சி.ஜே-வின் ஆலோசனையையும் அக்குழு கோரியது.

அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், இத்தீர்மானம் மேற்கு ஆசியாவில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் மேற்கு ஆசியாவில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம், செயல்படுவதற்கான சட்ட அடிப்படையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மக்களவையில் நடைபெற்ற விளக்கமளிப்பின்போது பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]