மலாக்கா, 04 நவம்பர் (பெர்னாமா) -- புலாவ் மலாக்கா, பண்டார் ஹிலிர் பகுதியில் பயணக் கப்பல் முனையத்தை கட்டமைப்பதால் சுற்றுலா நடவடிக்கைகளின் மூலம் மலாக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும்.
இது, நாட்டின் மேம்பாட்டிற்கு, கடல்சார் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மத்திய அரசாங்கத்தின் கொள்கையுடன் ஒத்துப்போவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கருத்துரைத்தார்.
"எனவே, பெரும் ஆற்றலுடைய கிள்ளான் துறைமுகம் மற்றும் பினாங்கு போன்ற உல்லாசக் கப்பல்களுக்கான பல முக்கிய துறைமுகங்கள் நம்மிடம் இருப்பதால், நாங்கள் (அரசாங்கமும்) இத்துறையை ஊக்குவித்து வருகிறோம்,'' என்றார் அவர்.
திங்கட்கிழமை மலாக்காவில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு முதலாவது மலாக்கா அனைத்துலக கடல்சார் பொருளாதார மாநாடு, MIMEC 2024 தொடக்க விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி லோக் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]