பொது

2025 ஜூலை முதலாம் தேதியிலிருந்து NGV-ஐ பயன்படுத்தும் வாகனப் பதிவு அல்லது உரிமத்திற்கு தடை

04/11/2024 05:55 PM

கோலாலம்பூர், 04 நவம்பர் (பெர்னாமா) -- இந்நாட்டில், NGV எரிபொருளைப் பயன்படுத்தும் அனைத்து மோட்டார் வாகனங்களும் சாலைப் பயன்பாட்டிற்காக பதிவு செய்யவோ அல்லது உரிமம் பெறவோ அனுமதிக்கப்படாது.

அடுத்தாண்டு ஜூலை முதலாம் தேதி தொடங்கி இது முழுமையாக அமல்படுத்தப்படும்.

பயனர்கள், குறிப்பாக NGV வாகன உரிமையாளர்களின் பாதுகாப்பு காரணமாக கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர அந்தோணி லோக் கூறினார்.

1995 முதல் 2014-ஆம் ஆண்டுக்கு இடையில் வாகனங்களில் பொருத்தப்பட்ட பெரும்பாலான NGV கலன்கள் தற்போது பயன்பாட்டில் இறுதிக் கட்டத்தில் உள்ளதால் பாதுகாப்பு கருதி அவை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று அந்தோணி லோக் தெளிவுப்படுத்தினார்.

ஒரு சில பயனர்கள், எல்.பி.ஜி கலன்களைப் பொருத்தி தங்கள் வாகனங்களை மாற்றியமைப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2008 முதல் இவ்வாண்டு வரையில், NGV வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஆறு விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லோக் தெரிவித்தார்.

இன்று, கோலாலம்பூரில், NGV வாகனங்களின் பயன்பாட்டு கொள்கை தொடர்பான சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் அதனைக் கூறினார்.

-- பெர்னாமா 

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]