கோலாலம்பூர், 04 நவம்பர் (பெர்னாமா) -- 280,231 நீரிழிவு நோயாளிகளுக்குப் பயனளிக்கும் SGLT2i மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு 2025 வரவு செலவுத் திட்டத்தில் 8 கோடியே 71 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிக பணம் செலவாகும் இருதய மற்றும் சிறுநீரக சிக்கல்கள் உள்ளிட்ட நீரிழிவு நோயாளிகளின் சிக்கல்களை அந்நடவடிக்கை குறைக்கும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
நீண்ட காலத்திற்கு நாட்டின் சுகாதார அமைப்பின் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய சுகாதார அமைச்சின் நோய் பராமரிப்பில் இருந்து சுகாதார பரிமாரிப்பிற்கு மாறுவதற்கு இந்த அணுகுமுறை உதவும் என்று டாக்டர் சுல்கிஃப்லி இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
ஜூன் 29-ஆம் தேதி தொடங்கப்பட்ட 2024-2030 மலேசிய மக்களிடையே சீனியைக் குறைப்பதற்கான வியூகத் திட்டத்தின் கீழ் 38 முன்முயற்சிகள் மற்றும் 65 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருதய நோய், புற்றுநோய், நீரிழிவு மற்றும் நாள்பட்ட சுவாச நோய் ஆகியவை அமைதியான கொலையாளிகளாக செயல்படுவதோடு அவை மலேசியாவின் மொத்த அகால மரணங்களின் எண்ணிக்கையில் 72 விழுக்காட்டிற்குப் பங்களிப்பதாகவும் டாக்டர் சுல்கிஃப்லி கூறினார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]