பொது

தாயாரைக் கொன்று மூன்று ஆண்டுகளாக குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த நபர்

12/11/2024 07:15 PM

பெட்டாலிங் ஜெயா, 12 நவம்பர் (பெர்னாமா) -- தமது தாயாரைக் கொன்று கடந்த மூன்று ஆண்டுகளாக குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த நபரின் நடவடிக்கை, தாம் எதிர்நோக்கும் நோய்க்கு சிகிச்சைப் பெற இன்று அவர் செய்த அவசர அழைப்பின் வழி அம்பலமாகி உள்ளது.

பெட்டாலிங் ஜெயா, ஜாலான் கிள்ளான் லாமாவில், சம்பவ இடமான வீடொன்றை போலீசார் சென்றடைந்தபோது 50 வயதுடைய அந்தச் சந்தேகத்திற்குரிய ஆடவரின் செயல் தெரிய வந்ததாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, உடல் நலமில்லை என்றும் சுகாதாரப் பிரச்சனை ஏற்பட்டதாகவும் காலை 9 மணிக்கு அச்சந்தேக நபர் 999 அவசர அழைப்பை தொடர்புக் கொண்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

பின்னர், அச்சந்தேக நபர் தமது தாயாரைக் கொன்று, அவரின் சடலத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த தகவலை போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.

அவர், தமது தாயாரை அடித்து துணியாலும் நெகிழியினாலும் சுற்றி சம்பந்தப்பட்ட வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனிடையே, இச்சம்பவத்தை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா உறுதிப்படுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)