ஷா ஆலம், 25 நவம்பர் (பெர்னாமா) -- அடுத்தாண்டு தொடங்கி சிலாங்கூர் மாநிலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை வரையில் எந்தவொரு வியாபாரத் தளங்களிலும் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பை பயன்பாட்டிற்கு தடை விதிக்கும் பரிந்துரையை அம்மாநில அரசாங்கம் முன்வைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, நெகிழிப் பை பயன்பாடு இல்லாத இலக்கை சாத்தியப்படுத்தும் அம்சங்களை மாநில அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அம்மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
''அடுத்த ஆண்டுக்கு முன்னர் சட்டம் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்தவோ அல்லது கடுமையாக்கவோ நாங்கள் ஒரு பயிலரங்கை நடத்தியுள்ளோம். இன்னும் பல வகையான சட்டங்கள் மற்றும் முயற்சிகளை இணைப்போம்,'' என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர் மாநில சட்டமன்ற அவையில் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]