சிப்பாங், 03 டிசம்பர் (பெர்னாமா) -- அடுத்தாண்டு கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 24 தொடங்கி பிப்ரவரி நான்காம் தேதி வரை சபா, சரவாக்கிற்கான பயணங்களை மேற்கொள்வதற்கு, இன்றிலிருந்து அடுத்தாண்டு பிப்ரவரி நான்காம் தேதி வரையில் நிலையான குறைந்த கட்டண விகிதத்தை ஏர் ஆசியா நிறுவனம் தொடங்கியது.
அப்பெருநாள் காலத்தில், 27,000 இருக்கைகளை உள்ளடக்கிய 145 பயணங்களை ஏர் ஆசியா நிறுவனம் வழங்குவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
அக்காலக்கட்டத்தில், கோலாலம்பூரிலிருந்து கூச்சிங், சிபு, பிந்துலு மற்றும் மிரி உட்பட ஜோகூர் பாருவிலிருந்து கூச்சிங், சிபு, பிந்துலு மற்றும் மிரி ஆகிய இடங்களுக்கான பயணச் சீட்டு விலை 328 ரிங்கிட்டாக விற்கப்படுகிறது.
அதேவேளையில், கோலாலம்பூரிலிருந்து கோத்தா கினாபாலு, சண்டக்கான் மற்றும் தாவாவ் உட்பட ஜோகூர் பாருவிலிருந்து கோத்தா கினாபாலு மற்றும் தாவாவ் ஆகிய இடங்களுக்கான பயணச் சீட்டு விலை 388 ரிங்கிட்டாக விற்கப்படுகிறது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]