பொது

கோலாலம்பூரில் அதிகமானோர் வறுமை நிலையில் உள்ளனர்

10/12/2024 07:24 PM

பெட்டாலிங் ஜெயா, 10 டிசம்பர் (பெர்னாமா) - கோலாலம்பூரில் அதிகமான குடும்பத் தலைவர்கள் வறுமை நிலையில் இருக்கின்றனர் என்று இ-காசே எனப்படும் தேசிய வறுமை தரவு அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, 474 குடும்பத் தலைவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

கடந்த மாதம் நிலவரப்படி கெடாவில் 341 குடும்பத் தலைவர்களும் சபாவில் 289 குடும்பத் தலைவர்களும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து ஜொகூர் மாநிலத்தில் 275 குடும்பத் தலைவர்களும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதாகத் தகவல் கூறப்பட்டது.

இந்நிலையில், பெர்லிஸ், மலாக்கா, நெகிரி செம்பிலான், புத்ரா ஜெயா ஆகிய மாநிலங்களில் தீவிர வறுமையால் யாரும் பாதிக்கப்படவில்லை. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)