டுங்குன், 16 டிசம்பர் (பெர்னாமா) -- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியில் பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதிசெய்ய இல்லிருப்பு கற்றல் கற்பித்தல், பிடிபிஆர் முறை இன்னும் ஏற்புடையதாக உள்ளதை கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் சுட்டிக்காட்டினார்.
வெள்ளத்தின்போது கல்வி முறையில் தடை ஏற்பட்டு விடாமல் இருக்க தமது அமைச்சு கவனம் செலுத்தும் அம்சங்களில் அதுவும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதைத் தவிர்த்து, தற்காலிக நிவாரண மையங்களில் 'Smart Support Team (SST)' மற்றும் 'Academic Support Team (AST)' ஆகிய குழுக்களையும் தமது அமைச்சு பணிக்கு அமர்த்துவதாக ஃபட்லினா கூறினார்.
''பிடிபிஆர் இன்னும் ஏற்புடையதுதான். அதனால்தான், பள்ளிகள் தற்காலிக நிவாரண மையங்களாகப் பயன்படுத்தப்படும்போது இம்மாணவர்களில் ஒரு பகுதியினர் பிடிபிஆர்-ஐ மேற்கொள்வர். எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்கள் அதற்கான வசதிகளையும் முக்கியத்துவத்தையும் வழங்க இம்முயற்சி மேற்கொள்ளப்படவிருக்கிறது,'' என்றார் அவர்.
பள்ளி தரப்பினர் பிடிபிஆர் முறையை அமல்படுத்த தயார்நிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)