பொது

டிசம்பர் 22 வரை தொடரும் கனமழை

20/12/2024 04:36 PM

கோலாலம்பூர், 20 டிசம்பர் (பெர்னாமா) - இம்மாதம் 22ஆம் தேதி வரை சரவாக், சபா மற்றும் லாபுவான் ஆகிய இடங்களில் தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

சரவாக்கில் கூச்சிங், செரியான், சமராஹான், ஶ்ரீ அமான், பெத்தோங், சரிக்கெய், சிபு, முக்கா மற்றும் பிந்துலு ஆகிய ஒன்பது இடங்கள் மோசமான அளவிலான எச்சரிக்கை நிலையிலும் கப்பிட், மீரி மற்றும் லிம்பாங் ஆகிய இடங்கள் எச்சரிக்கை நிலையிலும் இருப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, சபாவில் சிபித்தாங், தெனோம், கோலா பெஞ்சு, பியூஃபோர்ட், தம்புனான் மற்றும் கெனிங்காவ் ஆகிய உட்புற பகுதிகள் சண்டாக்கானில் தெலுப்பிட், கினபாத்தாங்கான் மற்றும் பெலுரான் உட்பட பந்தாய் பாராட், சண்டாகான், கூடாட் ஆகிய இடங்களில் எச்சரிக்கை நிலையிலான தொடர் மழை பெய்யும் என்றும் மெட்மலேசியா அறிவித்தது.

லாபுவானிலும் அதே எச்சரிக்கை நிலை வெளியிடப்பட்டுள்ளது. 

எனவே, அண்மைய வானிலை நிலவரம் குறித்து தெரிந்துக் கொள்ள மெட் மலேசியாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் அல்லது MYCUACA செயலியை பொது மக்கள் நாடலாம்.

அதோடு, கூடுதல் தகவல்களுக்கு 1-300-22-1638  என்ற மெட் மலெசியாவின்  hotline எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.   

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)