உலகம்

மீன்பிடி படகில் தத்தளித்த 100க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை மீட்டது

21/12/2024 01:47 PM

திருகோணமலை, 21 டிசம்பர் (பெர்னாமா) -- மீன்பிடி படகில் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள் என நம்பப்படும் 100க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

இலங்கை கடற்கரை பகுதியில், 25 குழந்தைகள் மற்றும் 30 பெண்கள் உட்பட அகதிகளை மீனவர்கள் கண்டதாக கடற்படை தெரிவித்தது.

மீட்கப்பட்ட அகதிகளுக்கு மருத்துவ பராமரிப்பு, உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

தொடர்பு காரணமாக மீட்கப்பட்டவர்கள் ரோஹிங்கியா அகதிகள் தானா என்பதை கடற்படை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஆனால், அவர்கள் மியான்மரை சேர்ந்தவர்கள் என கடற்படை நம்புவதாக விக்ரமசூரிய கூறினார்.

மியான்மரில் வசித்து வந்த முஸ்லிம் ரோஹிங்கியா சமூகத்தினர், இன பாகுபாடு காரணமாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

வங்காளதேசத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)