பொது

ஒரு கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமான சிகரெட் & அரிசி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன

30/12/2024 06:14 PM

கிள்ளான், 30 டிசம்பர் (பெர்னாமா) - மேற்கு துறைமுகம் மற்றும் சிலாங்கூரைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சோதனைகளில்,

ஒரு கோடி ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள அரிசி, மின் கழிவுகள், சிகரெட் மற்றும் புகையிலை ஆகியவற்றை சிலாங்கூர் மாநில இரண்டாவது மத்திய மண்டலத்தின் அரச மலேசிய சுங்கத் துறை,ஜே.கே.டி.எம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் மேற்கு துறைமுகத்தில், அனுமதியின்றி இறக்குமதி செய்ததாக நம்பப்படும் ஒரு கொள்கலனைச் சோதனை செய்ததில் ஒரு லட்சத்து 69,400 ரிங்கிட் மதிப்புள்ள 18,500 கிலோகிராம் அரிசி கண்டுபிடிக்கப்பட்டதாக ஜே.கே.டி.எம் மத்திய மண்டல உதவி தலைமை இயக்குநர் நோர்லேலா இஸ்மாயில் கூறினார்.

உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதற்காக பாகிஸ்தானில் இருந்து அந்த அரிசி கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் மேற்கு துறைமுகத்தில் 13 கொள்கலன்களை ஆய்வு செய்ததன் விளைவாக, 16 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள மூன்று லட்சம் கிலோ மின்கழிவுகளைக் கடத்தும் முயற்சியும் முறியடிக்கப்பட்டதாக நோர்லேலா  கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)