பொது

மக்கள் வீடமைப்பு திட்டத்திற்காக மலாக்கா மாநிலத்தில் உள்ள 12 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

31/12/2024 05:18 PM

ஆயர் கெரோ, 31 டிசம்பர் (பெர்னாமா) - பி.ஆர்.ஆர் எனப்படும் மக்கள் வீடமைப்பு திட்டத்திற்காக மலாக்கா மாநிலத்தில் உள்ள 12 இடங்களை, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சிடம் அம்மாநில அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

34.48 ஹெக்டர் பரப்பளவு கொண்ட அந்த இடங்களில் 2,394 வீடுகளை நிர்மானிக்கலாம் என்று மலாக்கா மாநில வீடமைப்பு, ஊராட்சித் துறை, வடிகால், பருவநிலை மாற்றம், பேரிடர் நிர்வகிப்பு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ராயிஸ் யாசின் தெரிவித்தார்.

''பல்நோக்கு மண்டபம், சுராவ், பாலர் பள்ளி, கடைகள், உணவுக் கடைகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானங்கள் போன்ற முழுமையான வசதிகளுடன் பல பி.பி.ஆர்-கள் அல்லது பி.ஆர்.ஆர்-கள் மலாக்கா மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளன. இவை தவிர, பள்ளிகள், மருத்துவமனைகள், சிகிச்சையகங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் பிற வசதிகளும் இந்த பி.பி.ஆர்-கள் அருகில் உள்ளன, '' என்றார் அவர்.

செவ்வாய்க்கிழமை, செரி நெகிரியில் நடைபெற்ற மலாக்கா மாநில சட்டமன்ற கூட்டத் தொடரில் டத்தோ ராயிஸ் அவ்வாறு கூறினார்.

மக்கள் வீடமைப்பு திட்டத்திற்காக லெண்டு, துன் குடு, போண்டோக் பாத்தாங், நியாலாஸ் மற்றும் பாயா ரும்புட் ஆகிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)