லண்டன், 02 ஜனவரி (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண காற்பந்து போட்டியில், இன்று அதிகாலை ஓர் ஆட்டம் நடைபெற்றது.
அதில், Brentford கிளப்பை 3-1 அதன் சொந்த அரங்கில் தோற்கடித்து ஆர்செனல் மூன்று புள்ளிகளைப் பெற்றது.
ஆட்டத்தின் முதல் கோலை 13-வது நிமிடத்தில் Brentford அடித்த வேளையில், Mikel Arteta தலைமையிலான ஆர்செனல், எச்சரிக்கையுடன் விளையாடத் தொடங்கியது.
அதன் பயனாக, 29-வது நிமிடத்தில் ஆர்செனல் அதன் முதல் கோலை Gabriel Jesus வழி போட்டு 1-1 என்று முதல் பாதியைச் சமன் செய்தது.
பின்னர், இரண்டாம் பாதி ஆட்டத்தை ஆர்செனல் முழுவதுமாக ஆக்கிரமித்தது.
அதில், 50 மற்றும் 53-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்களை ஆர்செனல் அடித்தது.
அவ்விரு கோல்களை Mikel Merino-வும் Gabriel Martinelli-யும் போட்டதில் ஆட்டம் 3-1 என்று ஆர்செனலுக்கு சாதகமாய் முடிந்தது.
இதுவரை நடந்த 12 ஆட்டங்களில், தோற்கடிக்கப்படாத ஆர்செனல் இந்த வெற்றியின் வழி, தற்போது 39 புள்ளிகளுடன் லீக்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)